சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கேள்வித்தாள் சமூகவலைத்தில் வெளியானதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் 25ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. மறுதேர்வை எதிர்த்தும், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக டெல்லியில் ஒரு பள்ளியைச் சேர்ந்த, ரிஷப், ரோஹித் ஆகிய இரு ஆசிரியர்களையும், தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த தக்கீர் என்பரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.