பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை தவறாக பயனபடுத்திய வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்திருந்தது.
எனவே தயாநிதிமாறன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சிபிஐ இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.