கரூர் 41 பேர் பலியான விவகாரம்.. திடீரென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

Mahendran

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (14:21 IST)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை வரும் அக்டோபர் 10 அன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.
 
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கடந்த செப்டம்பர் 27 அன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சோக நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி. ஆஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
 
ஏற்கனவே, இதே கோரிக்கையை வலியுறுத்தி விஜய் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்