ஒடிசா மாநிலம் பாரி வட்டாரத்தில் உள்ள போடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கான்டியா என்ற கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுகதேவ் மகாலாவின் மனைவியான சௌதாமினி மகாலாவும் , கராஸ்ரோடா ஆற்றுக்கு துணி துவைப்பதற்காக சென்றிருந்தார். அவர் துணி துவைத்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆற்றிலிருந்து வந்த ஒரு முதலை சௌதாமினி மகாலாவை தாக்கியது.
தாக்குதலுக்குள்ளான அவர், சற்றும் சுதாரிப்பதற்குள், முதலை அந்த பெண்ணை ஆற்றுக்குள் இழுத்து சென்றது. இந்த கொடூர சம்பவத்தால் ஆற்றங்கரையில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். கிராம மக்கள் உடனடியாக ஆற்றின் அருகே திரண்டு, அந்த பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.