ஜியோ- ஏர்டெல் -க்கு போட்டியாய் மாறும் BSNL ! இனி அதிரடி தான் !

புதன், 16 அக்டோபர் 2019 (19:04 IST)
நம் நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது பி.எஸ்.என்.எல்  தொலைத் தொடர்பு நிறுவனம். ஆரம்பித்த புதிதில் செழிப்பாக இருந்த இந்த அமைப்பு, நாட்டில் தனியார்துறைக்கு தொலைத் தொடர்புத்துறை சென்றதுக்கு பின்னர் போட்டியைச் சமாளிக்க முடியாமல்  திணறிவருகிறது.
தற்போது, இதன் மொத்த வருமானத்தில் 60% மேல் இந்நிறுனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கே செலவிடப்படுவதகாவும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப உள்ளதாகவும்,தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவையை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணமாகவே உள்ளது.
 
இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை  தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாய் மாற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதற்காக அந்நிறுவனம் 3 ஜி சேவையில் இருந்து 4 ஜி சேவைக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக்கிறது.
 
மேலும், அதிவேகமாக தொலை தொடர்பு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு  தரும் வகையில் Voice over Long-Term Evolution (VoLTE) என்ற தொழில்நுட்பத்தையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுக செய்ய உள்ளது.
 
தற்போது இந்த சோதனை பல முன்னனி மொபைல் போனகள் மூலமாய் சோதித்து வருகிறது.  இந்த புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்வதன் வாயிலாக அதிக டேட்டாவின் மூலம் வீடியோ காலிங் மற்றும் வாய்ல் கால் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
 
அதனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல்  நிறுவனம் அறிமுகம் செய்தால் நிச்சயம் ஜியோ , ஏர்டெல் ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களுகு சவால் விடும் வகையில் பல ஆஃபர்களையும் அந்நிறுவம் வழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்