#IndianeedBSNL: தூள் கிளப்பும் BSNL, ஏமாற்றும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்!!
மைக்ரோ பிளாகிங் தளத்தில் பிஎஸ்என்எல் 4ஜி பிரபலமானதை தொடர்ந்து, டிவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் #Switch_To_BSNL டிரெண்டானது. தற்போது #IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
ஏனெனில், ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுக்கும் பயனர்கள் மீது வினாடிக்கு 6 பைசா கட்டணம் விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இது பிஎஸ்என்எல் 4ஜி-க்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.