இன்னும் ஒருசில மாதங்களில் 4ஜி: வேகமெடுக்கும் பி.எஸ்.என்.எல்!

வியாழன், 2 டிசம்பர் 2021 (08:49 IST)
இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தனது 3ஜி சேவையை மட்டுமே தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் 4ஜி சேவையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகியவை சமீபத்தில் பிரிபெய்டு கட்டணங்களை உயர்த்திய நிலையில் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறுவதற்கு தயாராகி வருகின்றனர் என்பதும் இதுகுறித்த ஒரு ஹேஷ்டேக் சமீபத்தில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பை கணக்கில் கொண்டு அந்நிறுவனம் தற்போது சுறுசுறுப்பாகி உள்ளது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
அதேபோல் வரும் 2023-ம் ஆண்டுக்குள் 5ஜி சேவையும் பிஎஸ்என்எல் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்