சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் கீழ், வெறும் ரூ.1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம் கார்டு பெறலாம்.
இந்த சலுகை, இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை பொதுமக்கள் இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் பொதுமக்கள், அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது முகாம்களுக்கு சென்று இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.