மார்பக புற்றுநோய் மருந்து.. ரூ.80,000ல் இருந்து ரூ.3800ஆக குறைப்பு!

சனி, 28 ஜனவரி 2023 (12:16 IST)
இந்தியாவில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலைகளை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். 
 
இந்த நிலையில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலை குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3800 ரூபாயாக குறையும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
இந்த தகவல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பதே தங்களது இலக்கு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்