பாஜகவின் அடுத்த தலைவர் இவர்தானா ! எகிறும் அரசியல் பரபரப்பு

வியாழன், 30 மே 2019 (17:35 IST)
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
இந்நிலையில் இன்று மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவையில் யார்? யார் இடம் இடம்பெறுவார்கள் எனபது குறித்த அரசியல் பரபர்ப்புகள் எகிறிக்கொண்டே உள்ளது.
 
இந்நிலையின் இன்று மாலை 7 மணி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மோடி பாரதப்பிரதமராக பதவியேற்கும் விழா சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.அப்போது அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
முன்னதாக தற்பொழுது புதிய அமைச்சர்களாக பதவியேற்கப்போகிற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தேனீர் விருந்து நடைபெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மேலும் பாஜகவின் அடுத்த தலைவராக ஜெ.பி . நட்டா என்பவர் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிவருகிறது.

மோடி அமைச்சரவையில் ஜேபி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்