முதல்வரின் தலையை துண்டித்தால் 11 லட்சம் பரிசு: பாஜக நிர்வாகி சர்ச்சை கருத்து!
புதன், 12 ஏப்ரல் 2017 (13:02 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை துண்டிப்பவருக்கு ரூபாய் 11 லட்சம் பரிசாக தருவதாக அம்மாநில பாஜக இளைஞரணி தலைவர் யோகேஷ் வர்ஷனே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர்.
அனுமதி பெறாமல் தடையை மீறி பாஜகவினர் ஊர்வலம் நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளர் அந்த மாநில பாஜக இளஞரணி தலைவர் யோகேஷ் வர்ஷணே.
மேலும் மம்தா பானர்ஜி அரசு சரஸ்வதி பூஜை, ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி போன்ற ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்காமல் பாஜகவினர் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்த உத்தரவிடுகிறது.
#WATCH Aligarh:BJP Youth wing leader Yogesh Varshney offers Rs 11 lakhs for WB CM's head after a lathicharge in Birbhum on Hanuman Jayanti pic.twitter.com/JR77MgzptV
ஆனால் அவர் மட்டும் இப்தார் நோம்புக்கு அனுமதித்து முஸ்லிம்களை ஆதரிக்கிறார். எனவே மம்தாவின் தலையை துண்டித்து கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என கூறினார். ஒரு மாநில முதல்வரின் தலையை துண்டிக்க வேண்டும் என பாஜக நிர்வாகி பேசியது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.