இந்து - முஸ்லிம் இடையே பிரச்சினைகளை தூண்டி, சமூகத்தில் வெறுப்புணர்வை வளர்த்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்து, முஸ்லிம் மதத்தினரிடையே பிரச்சினைகளை தூண்டும் வகையில் பிரதமர் மோடி தினசரி வெறுப்பு உரையாற்றி வருகிறார் என தெரிவித்தார்.
ஒருபுறம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி வருகிறார் என்றும் மறுபுறம், இந்து-முஸ்லிம் என பிரிவினையை தூண்டினால் பொது வாழ்க்கையில் இருக்க தனக்கு எந்த தகுதியும் இல்லை என கூறுகிறார் என்றும் தினமும் இதுபோன்ற விஷயங்களை பொது வாழ்க்கையை விட்டு விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.