குஜராத் தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு? கசிந்த தகவல்!!

வியாழன், 14 டிசம்பர் 2017 (19:43 IST)
குஜராத் மாநில சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நிறைவுபெற்றது. வரும் 18 ஆம் தேதி குஜராத் மற்றும் இமாச்சல் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். 
 
இந்நிலையில், தனியார் பத்திரிக்கை எடுத்த கருத்துகணிப்பில் ஹிமாச்சல பிரதேசத்திலும் குஜராத்திலும் பாஜக தனிப்பெரும்பான்மையை பெறும் என தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 135 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி 47 இடங்களைப் பிடிக்கும் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
 
அதேபோல், இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமாச்சலில் 68 தொகுதிகளில் பாஜகவுக்கு 55 இடங்களும், காங்கிரஸுக்கு 13 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 
பத்திரிக்கைகளின் கருத்துகணிப்பு முடிவுகள்: 
 
குஜராத்: 
 
இந்தியா டுடே அக்ஸிஸ் மை இந்தியா: காங்கிரஸ் (68-82), பாஜக (99-113), மற்றவை (1-4)
டைம்ஸ் நைவ்: காங்கிரஸ் (66), பாஜக (113), மற்றவை (3)
இந்தியா டிவி: காங்கிரஸ் (65-75), பாஜக (104-114), மற்றவை (0-4)
ABP: காங்கிரஸ் (64), பாஜக (117), மற்றவை (1)
நியூஸ் 18: காங்கிரஸ் (74), பாஜக (108), மற்றவை (0)
நியூஸ் 24: காங்கிரஸ் (47), பாஜக (135), மற்றவை (0)
 
இமாச்சல பிரதேசம்: 
 
இந்தியா டுடே அக்ஸிஸ் மை இந்தியா: காங்கிரஸ் (13-20), பாஜக (47-55), மற்றவை (0-2)
டைம்ஸ் நைவ்: காங்கிரஸ் (17), பாஜக (51), மற்றவை (0) 
நியூஸ் 24: காங்கிரஸ் (13), பாஜக (55), மற்றவை (0)
ABP: காங்கிரஸ் (29), பாஜக (38), மற்றவை (0)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்