ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா: பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:00 IST)
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாஜக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே பாஜக பிரபலமும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து அவர் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை சமீபத்தில் தொடர்பு கொண்டவர்கள் சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கொரோனாவில் இருந்து விரைவில் குணமாக வேண்டும் என பாஜக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்