சிக்கன் சாப்பிட்டு பறவைக்காய்ச்சலை பரப்புறாங்க! – விவசாயிகள் மீது பாஜக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

திங்கள், 11 ஜனவரி 2021 (13:34 IST)
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருவது குறித்து பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் கொரோனா, பறவைக்காய்ச்சல் போன்றவற்றால் டெல்லி கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ள ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர் “டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏதோ சுற்றுலாவுக்கு வந்திருப்பதை போன்று சிக்கன், பிரியாணி, ஆகியவற்றை சாப்பிட்டு ஆடம்பரமாக திரிகிறார்கள். மேலும் சிக்கன் சாப்பிட்டு நாட்டில் பறவைக்காய்ச்சலை பரப்பும் சதித்திட்டத்தை தீட்டி வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்