பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது- மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

சனி, 29 அக்டோபர் 2022 (15:33 IST)
பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான  அமைச்சரவையில் பல முக்கிய அறிவிப்புகளும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், சமீபகாலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்த்ய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளதாகவும், பணவீக்கம் அதிகரித்துள்ளாதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார்.


இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, எரிபொருட்களின் விலையைக் குறைத்திருக்கிறோம்.


ALSO READ: பணவீக்கம் அதிகரிப்பு என்பது பொய்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மேலும், பாஜக ஆளுகின்ற மா நிலங்களிலும் பெட்ரோல்  உள்ளிட்ட எரிபொருட்களின் விலையைக் குறைத்திருக்கிறோம். காங்கிரஸ் ஆளும் மா நிலங்களில் விலைகுறைப்பு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்