பொய்யான செய்திகள் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து: பிரதமர் மோடி

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:39 IST)
பொய்யான செய்திகள் நாட்டில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியபோது மக்களுக்கு பொய்யான செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஒரே ஒரு பொய்யான செய்தி கூட நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார் 
 
ஒரு முறைக்கு 10 முறை பொய்யான செய்தியை உண்மை என்று மக்கள் படிக்கத் தொடங்கினால் உண்மையான செய்திக்கும் பொய்யான செய்திக்கும் இடையிலான வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் சமூக ஊடகங்களில் வலம் வரும் பொய்யான செய்திகளை பகிர்வதற்கு முன்பாக ஒருவர் பல முறை யோசிக்க வேண்டும் என்றும் பொய்யான செய்திகளை பரவுவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்