ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கிய பாஜக வேட்பாளர்.! யார் தெரியுமா.?

Senthil Velan

வெள்ளி, 3 மே 2024 (17:50 IST)
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேரு குடும்பத்துடன் அதிக பிணைப்பு கொண்ட ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். நடப்பு மக்களவை தேர்தலில் அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
அவருக்கு பதிலாக ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் களம் காணுகிறார். இந்நிலையில், பாஜக சார்பில் உத்தர பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் ரேபரேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து.! அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2 டன் வெடிபொருள் இருந்ததால் பரபரப்பு.!!
 
கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த தினேஷ் பிரதாப் சிங், 2019 மக்களவை தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு போட்டியாக அவர் மீண்டும் களம் காண உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்