இன்று நடைபெற்ற கேதார்நாத் யாத்திரை மேலாண்மை கூட்டத்தில், பல்வேறு முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கேதார்நாத் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஆஷா நௌதியல், சில பிரச்சினைகளை எழுப்பினார்.
கேதார்நாத் கோவிலின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மக்கள் எழுப்பிய கவலைகளைப் பகிர்ந்த நௌதியல், கோவிலின் மதிப்பை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அத்தகையவர்களின் நுழைவைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பெரும்பாலும் 'இந்துக்கள் அல்லாதவர்கள்' தான் இத்தகைய செயலை செய்வதாகவும், இதனால், கோவிலில் ஏற்படும் அவதூறுகளை தடுக்கும் வகையில், இந்துக்கள் அல்லாதவர்கள் கேதார்நாத் கோவிலில் நுழைய முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.