”உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது, இதனால் மக்கள் பாதிப்பட்டுள்ளனர், சிஏஏ, என் ஆர் சி, என ஒரு புறம் அமித் ஷா பேசிகின்ற நிலையில், மோடி என்.ஆர்.சி. அமல்படுத்தமாட்டோம் என கூறுகிறார். இதில் யார் உண்மையை பேசுகிறார்கள் என தெரியவில்லை” என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த பாஜக, முதலில் தனது சொந்த கட்சியின் மோதலை தீர்க்குமாறு காங்கிரஸுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் ”உள்விவகாரங்களால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியில் அவர் கவனம் செலுத்த வேண்டும். பாஜகவுக்கு எந்த மட்டத்திலும் மோதல்கள் இல்லை" பாஜக சார்பில் கூறப்பட்டுள்ளது.