இதனைத்தொடர்ந்து, திமுக காங்கிரஸ் மோதல் குறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் இன்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல், நான் ஏற்கனவே சொல்லியது போல இரு கட்சிகளுக்கும் இடையில் விரிசல் எழுந்துள்ளது எனப் பதிலளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக – காங்கிரஸில் எந்த விரிசலும் இல்லை. அடிக்கடி இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவது இயல்புதான். கொள்கைரீதியாக திமுக – காங்கிரஸ் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அதை யாராலும் தகர்க்க முடியாது என்று கூறினார்.
அதோடு இல்லாமல், பதிலளித்த கே.எஸ்.அழகிரி கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். மதசார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கமல் பாஜக ஆதரவாளர் ரஜினியின் உதவியை நாடுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.