பிறப்பு சான்றிதழை அடையாளமாகப் பயன்படுத்தலாம் - மத்திய அரசு

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:49 IST)
அடுத்த மாதம் முதல் மக்கள் தங்கள் பிறப்பு சான்றிதழை அடையாளமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகளாகியுள்ள நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பாஜக ஆட்சியில் மக்களுக்கு  பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிறப்பு சான்றிதழை அடையாளமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி,  வாக்காளர் அடையாள அட்டை பெறவும், ஓட்டுனர்  உரிமம் பெறவும் பிறப்பு சான்றிதழை ஆவணமாக அடுத்த மாதம் முதல் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்