குஜராத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:14 IST)
குஜராத்   மாநிலத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
சமீபகாலமாக போதைப் பொருள் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், மற்றும் போலீஸாருடன் இணைந்து அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதற்காக விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகிறது.

இந்த  நிலையில் குஜராத்   மாநிலத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் மாநிலம் பக்ரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் என்ற பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மும்பை போதைப் பொருள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வரவே, உடனடியாக அங்கு சென்ற மும்பைபோதைப் பொருள் தடுப்புப் புரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் 513 கிலோ எம்பி போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1063 கோடி என அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக 1 பெண் உட்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்