கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் விடுதலை! – குஜராத் அரசுக்கு எதிர்ப்பு!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:18 IST)
கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலம் ரந்தீக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கடந்த 2002ம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அப்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் அந்த கும்பல் பானோவின் உறவினர் ஒருவரையும் அடித்துக் கொலை செய்தது.

இது தொடர்பான வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது 11 குற்றவாளிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு.

குஜராத் அரசின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள், பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்