பீகாரில் 2 பாஜக துணை முதல்வர்கள்..?

திங்கள், 16 நவம்பர் 2020 (09:38 IST)
பீகார் மாநிலத்தில் இன்று 7வது முறையாக நிதிஷ்குமார் முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 243 உறுப்பினர்களை கொண்ட இம்மாநிலத்தில் 125 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூடி நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தனர். 
 
இதனை அடுத்து 7வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார் அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போதைய தகவலின் படி பீகாரில் பாஜகவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர் என கூறப்படுகிறது. இவர்கள் யார் என தகவல் வெளியாகவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்