தமிழக மாணவி தற்கொலைக்கு மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்!

ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:10 IST)
சாம்ஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தமிழக மாணவி தற்கொலைக்கு மத்திய அரசை சாடியுள்ளார். 
 
நேற்று ஒரே நாளில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் முருகேசன் ஆகிய மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
 
இந்த தற்கொலையின் பரபரப்பு தமிழகத்தில் இன்னும் நீங்காத நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 900 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். 
 
இந்நிலையில் இது குறித்து சாம்ஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நீட் தேர்வால் தமிழக மாணவி தற்கொலை என்பது ‘பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற மத்திய அரசின் ஸ்லோகனின் படுகொலை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்