சௌரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு: மருத்துவமனை தகவல்

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (10:22 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சௌரவ் கங்குலி உடல் நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் மருத்துவமனை தகவல் வெளியிட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சவுரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சௌரவ் கங்குலி அவர்களுக்கு இலேசான டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு மட்டுமே இருப்பதால் ஆபத்து ஒன்றுமில்லை என்றும் அவர் 14 நாட்களுக்கு பிறகு வழக்கமான பணிகளை தொடர்வார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்