பாஜகவில் இணைந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (13:01 IST)
ஒவ்வொரு தேர்தல் சீசனிலும் அரசியல் கட்சிகளில் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் முக்கிய அரசியல் கட்சிகளில் இணைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக பாஜகவில் கடந்த சில காலமாக விளையாட்டு வீரர்கள் அதிகம் இணைந்துள்ளனர்.
 
பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் சற்றுமுன்னர் பாஜகவில் இணைந்துள்ளார்.
 
சற்றுமுன் சாய்னா நேவல் பாஜகவின் தேசிய செயலாளர் அர்ஜூன் சிங் முன் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார். சாய்னா நேவல் மட்டுமின்றி அவரது சகோதரி சந்திரன்ஷூ என்பவரும் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் சாய்னா இணைந்ததை அடுத்து விரைவில் அவருக்கு மாநிலஙகளவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்