நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறையை அடுத்து, திங்கட்கிழமை ஹோலி விடுமுறையை செவ்வாய் கிழமை வேலை நாளாக உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை இருக்காது. அதற்கடுத்த நாள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அன்றும் சேவை இருக்காது. ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறையை அடுத்து ஏப்ரல் 3 சனிக்கிழமை வங்கி சேவை இருக்கும். ஆனால் அதற்கடுத்த நாள் ஞாயிறு விடுமுறை என்பதால் விடுமுறையாகும். இப்படி அடுத்த வாரம் முழுவதும் வங்கி சேவை தொடர்ச்சியாக கிடைக்காத சிக்கல் மக்களுக்கு எழுந்துள்ளது.