வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கனும்… வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர்!

புதன், 24 மார்ச் 2021 (07:31 IST)
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் கடன் கேட்டு கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் சுயேட்சை வேட்பாளர் ஒருவர்.

தேர்தல் என்றாலே பணத்துக்கு வாக்கு என்ற நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்திய தேர்தல்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இப்போது சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிர்க்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் பணம் கொடுக்கப்படுவதை முழுவதுமாக நிறுத்த முடியாது என்பதே யதார்த்தம். இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் 46 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணபித்துள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்