அதாவது, லாக்கர் ஒப்பந்தத்தின் படி, லாக்கரில் வைக்கப்படுகிற பொருட்கள் திருட்டு போனாலோ, சேதம் ஏற்பட்டாலோ அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. அதற்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாக வங்கிகள் குறிப்பிட்டுள்ளன. மேலும், லாக்கர் சேவையை பொறுத்தவரை, வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் உள்ள உறவு நிலத்தின் சொந்த காரருக்கும், வாடகைக்கு இருப்பவருக்கும் உள்ள உறவை போன்றதுதான் என பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல், யூகோ வங்கி, கனரா வங்கி உள்பட 19 பொதுத்துறை வங்கிகள் பதிலளித்துள்ளன.
எனவே, இதுபற்றி சிசிஐ எனப்படும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அவர் புகார் தெரிவித்துள்ளர். அதில், லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு பொதுத்துறை வங்கிகள் எந்த பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாகவும், இது தொடர்பாக எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வகுக்கவில்லை என அவர் புகார் கூறியுள்ளார்.
மேலும், லாக்கரில் பொருட்களை வைப்பதற்கு வங்கிகளுக்கு கட்டணம் செலுத்தியும், வங்கிகள் பொறுப்பு ஏற்காத நிலையில், பொதுமக்கள் தங்கள் நகை உள்ளிட்ட பொருட்களை காப்பீடு செய்து கொண்டு வீட்டிலேயே வைத்து விடலாமே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.