ஏ.டி.எம்-இல் இருந்து வரும் பானிபூரி: குஜராத் இளைஞரின் சாதனை

புதன், 8 ஜூலை 2020 (07:45 IST)
ஏ.டி.எம்-இல் இருந்து வரும் பானிபூரி
ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் வரும் என்று தான் நாம் இதுவரை கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பானிபூரி கிடைக்கும் ஏடிஎம் மெஷின் ஒன்றை தயாரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் காலத்தில் சுகாதாரமான உணவு அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக கை படாத வகையில் மக்களுக்கு பானிபூரி கிடைக்க யோசித்ததன் விளைவே இந்த பாணி பூரி ஏடிஎம் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார் 
 
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரஜாபதி என்ற இளைஞர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர். இவர் சாலைகளின் ஓரங்களில் பானிபூரி விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கையில் பானிபூரி வாங்கி சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருவதை பார்த்தார். இதனை அடுத்து அவர் பாணி பூரி மிஷின் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார். தற்போது இந்த மெஷினை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார் 
 
இந்த மெஷினில் 20 ரூபாய் நோட்டை உள்ளே செலுத்தினால் அதிலிருந்து கன்வேயர் பெல்ட் வழியாக பானிபூரி உடன் உருளைக்கிழங்கு கலவை ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. இதனை எடுத்து அப்படியே சாப்பிடலாம். கொரோனா நேரத்தில் மக்கள் சுகாதாரமான முறையில் இந்த பானிபூரியை தைரியமாக பயமின்றி சாப்பிடலாம் என்று இந்த மெஷினை கண்டுபிடித்த பிரஜாபதி தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த மெஷின் எப்படி செயல்படுகிறது, இதை கண்டுபிடிக்க தான் என்னென்ன செய்தோம் என்பது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்