கடும் நிதி நெருக்கடி: பெங்களூரு அலுவலகத்தை காலி செய்யும் பைஜூஸ் நிறுவனம்..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (09:20 IST)
கடும் நிதி நெருக்கடி காரணமாக பைஜூஸ் நிறுவனம் அதன் பெங்களூரு அலுவலகத்தை காலி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு நிறுவனத்தின் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும், சில அலுவலகங்களை மூடுவது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளது.
 
பைஜூஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் சுமார் 1,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
 
பெங்களூரு மட்டுமின்றி பைஜூஸ் நிறுவனம் அதன் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வேறு சில அலுவலகங்களையும் மூட உள்ளது. இந்த முடிவுகள் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் செலவுகளைக் குறைக்கவும் உதவும் என்று நிறுவனம் நம்புகிறது.
 
பைஜூஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகம் மூடப்பட்டாலும், வேறு இடத்தில் அந்த அலுவலகம் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்