பாஜக எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரு.6 கோடி பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

வெள்ளி, 3 மார்ச் 2023 (09:48 IST)
பாஜக எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரு.6 கோடி பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
பெங்களூரு பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோக் ஆயுக்தா  அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியதில் ஆறு கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்த பணம் கணக்கில் வராத பணம் என்றும் கூறப்படுகிறது. 
 
பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் பசவராஜ் பொம்மை தலைமையிலான இந்த ஆட்சியில் பல ஊழல்கள் முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பெங்களூர் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் என்பவரது வீட்டில் லோக் ஆயுக்த அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் ஆறு கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பாஜக எம்எல்ஏ வீட்டில் ரூபாய் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்