பாஜக என் கைக்குள்; இப்போது நினைத்தால் கூட நான் பிரதமர்: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு!

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (15:36 IST)
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் குறைந்த காலகட்டத்தில் இந்தியா முழுக்க பிரபலமாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் திடீர் வளர்ச்சிக்கு பின் பாஜக கட்சியினர் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
இந்நிலையில் பாபா ராம்தேவ் சர்ச்சைக்குறிய சிலவற்றை பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு... நான் நடத்தும் நிறுவனத்தில் இருந்து எப்போதும் எனக்கு வருமானம் தேவைப்பட்டது இல்லை. நான் இதை பொது நல நோக்கத்தோடு மட்டுமே செய்கிறேன். 
 
நான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும். பாஜக கட்சியில் எனக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கட்சி அலுவலகம் திறந்து முதலமைச்சராகவோ, எம்.பியாகவோ, பிரதமராகவோ முடியும். 
 
ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இருந்ததே இல்லை. நான் இப்படியே மக்களுக்கு சேவை செய்யவும், பதஞ்சலி மூலம் பொருட்கள் விற்கவும் விரும்புகிறேன் என கூறியுள்ளார். ஆனால், அவரது பிரதமராவேன் என்ற பேச்சு சர்ச்சையை ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்