சபரிமலை சீசனுக்கு பக்தர்களுக்கு அனுமதி உண்டா? கேரள முதல்வர் தகவல்

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:27 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் சபரிமலை ஐயப்பனுக்கு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் செல்வது வழக்கம். அந்த நிலையில் இந்த ஆண்டும் சபரிமலை கோவிலுக்கு செல்ல ஏராளமானோர் மாலை அணிந்துள்ளனர் 
 
இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் இந்த ஆண்டு சீசனுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கண்டிப்பாக தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் பம்பை நதியில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பக்தர்கள் தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசங்கள் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஓரளவுக்கு கெடுபிடிகள் மற்றும் நிபந்தனைகள் இருந்தாலும் இந்த ஆண்டு பக்தர்களுக்கு சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு திருப்தியை அளித்து உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்