அயோத்தியில் நடந்த தீபோற்சவ நிகழ்வில் ஒரே நேரத்தில் 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று நடைபெற்ற எட்டாம் நாளாக இந்த தீபோற்சவ நிகழ்வு சரயு படித்துறையில் 1121 பேர் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தி 25 லட்சம் விளக்குகளை ஏற்றினர். இது கின்னஸ் உலக சாதனைக்காக படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், அமைச்சர்களும் இணைந்து விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாட்டத்தை தொடங்கினர். சரயு படித்துறையில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டதாகவும், 1121 பேர் ஒரே நேரத்தில் வழிபாடு நடத்தியதாகவும் இரண்டு உலக சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீபோற்சவ நிகழ்ச்சியை ஒட்டி சுமார் 5000 முதல் 6000 பேர் பங்கேற்க அரசு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏழு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் தீபோற்சவ நிகழ்வு நடந்து வருவதால், இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.