பாபர் மசூதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு 3 தரப்பு உரிமை கோரியது. சன்னு வஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா , ராம் லல்லா அமைப்புகள் அலஹாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இம்மூன்று அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து , இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தொடர்ந்து 40 நாட்கள், விசாரணைக்குப் பிறகு , இன்று தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
மேலும் மூன்று தரப்பினரின் வாதம்ங்களை இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அயோத்தி வழக்கின் தீர்ப்பு தேதியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒத்திவைத்துள்ளார். அதாவது தலைமைநீதிபதி ஓய்வு பெறும் நாளான நவம்பர் 17 க்குள் அவர் இந்த தீர்ப்பை வெளியிடுவார் என பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.