திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வாரு பிறந்த நாளின் போதும், கருணாநிதி-தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுவார். இந்த ஆண்டு கருணாநிதி உயிருடன் இல்லை. இந்த வருத்ததை ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார். வழக்கமாக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் பிறந்த நாளை கொண்டாடும் ஸ்டாலின், இந்த ஆண்டு கருணாநிதி உயிருடன் இல்லாததால் பிறந்த நாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை பேட்டியிலேயே அவர் கூறியிருந்தார்.
மேலும் "என் பிறந்த நாள் விழா எனும் பெயர் ஆடம்பர விழாக்களை தவிர்த்துவிட்டு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல திட்ட உதவிகளை வழங்க வேண்டும்" என்றும் தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோளும் விடுத்திருந்தார் .