வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்டதால் வீடு இடிக்கப்பட்டதா? உபி அரசு அதிரடி

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (17:11 IST)
வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்டதால் வீடு இடிக்கப்பட்டதா? உபி அரசு அதிரடி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளி அன்று நிகழ்ந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ஜாவேத் அகமது என்பவரின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர் நுபுர் என்பவரை கைது செய்ய வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் உபி மாநிலத்தில் போராட்டம் என்ற பெயரைல் வன்முறையில் ஈடுபட்டது குறித்த விசாரணை செய்தபோது போராட்டக்காரர்களின் சட்ட விரோத கட்டிடங்கள் குறித்து அரசு ஆலோசனை செய்து வந்தது.
 
இந்த நிலையில் இந்த போராட்டத்தின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாவேத் அகமது வீடும் சட்டவிரோதமாக அனுமதி இன்றி கட்டியது தெரியவந்தது இதனை அடுத்து அந்த வீட்டிலுள்ளவர்கள் பதினோரு மணிக்குள் வெளியேற வேண்டுமென எச்சரிக்கை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள், வீட்டை ஆயுதமேந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டில்தான் போராட்டத்திற்காக போஸ்டர்கள் கொடிகளை வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்