மதரஸா என்ற வார்த்தையே இருக்கக் கூடாது! – முதல்வர் பேச்சால் சர்ச்சை!

திங்கள், 23 மே 2022 (11:40 IST)
அசாம் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, மதரஸாக்கள் இருக்கக்கூடாது என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அசாமில் இஸ்லாமியர்களுக்கு கல்வி போதிக்கும் மதரஸாக்களை பொது பள்ளிக்கூடங்களாக மாற்ற கடந்த ஆண்டு அம்மாநில அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து மதரஸாக்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மதரஸாக்களை பொதுப்பள்ளிகளாக்கும் அரசின் முடிவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா “'மதரஸா' என்ற வார்த்தை இருக்கும் வரையில் குழந்தைகளால் தாங்கள் மருத்துவராகவோ, பொறியாளர்களாகவோ வர வேண்டும் என நினைக்க முடியாது. உங்கள் குழந்தைகளுக்கு குரானை போதியுங்கள். யாரும் அதை தடுக்கப் போவதில்லை. ஆனால் அதை உங்கள் வீட்டில் வைத்து செய்யுங்கள்” என்று பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்