ஆணவம் என்பது ஆபத்தானது... மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:45 IST)
உலக நாடுகளையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது கொரோனா.  உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை என்பது லட்சத்தை நெருங்கி வருகிறது.  இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசை விமர்சித்து வரும் ராகுல் காந்தி இன்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தத்துவத்தைச் சுட்டிக்காட்டி தனது டுவிட்டல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,ஐன்ஸ்டீனின் தத்துவமான அறியாமையை விட ஆபத்தானது ஆவணம்  என்று சுட்டிக்காட்டி இந்த ஊரடங்கு இதனை நீரூபித்துள்ளது என்று கூறியுள்ள அவர், நம் நாடில் பொருளாதாரம் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிடும் வகையில் ஒரு கிராபிக்ஸ் படத்தைப்  பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்