டெல்லியில் மீண்டும் ஊரடங்கா? அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

வியாழன், 19 நவம்பர் 2020 (10:59 IST)
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக சிறிய அளவிலான ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த டெல்லி அரசு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் 5 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது. அதற்கேற்றார் போல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் இப்போது தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிறிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு ஆலோசித்து வருவதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.

ஆனால் அதை டெல்லி மாநில முத்லவர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்