கேரளாவில் கடந்த 28ம் தேதி தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள அனயரா பகுதியில் வசித்துவந்த 19 வயது மாணவி தனது காதலனை கொச்சியில் சந்தித்துவிட்டு நேற்று முந்தினம் ஊர் திரும்பினார். அப்போது அவருடன் வந்த காதலன் ஷைஜு தனது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பெண் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் சிலர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.