ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி என சித்தரித்தை அடுத்து, பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்திய பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணித்தல், மாட்டுக்கறி வைத்திருந்ததால் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரம், பசு இந்தியர்களின் தாய் எனக் கூறிய விவகாரம், நிர்வான சாமியாரை ஹரியானா சட்டப் பேரவையில் அமர்த்தி ஆசி பெற்றது உள்ளிட்ட பல விஷயத்திலும் பாஜக தனது இந்துத்துவா நிலைப்பாட்டை வைப்பதை அடுத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இப்போது கேரளத்தில் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி என்று சொல்லி குழப்பம் விளைவிக்க முயல்கின்றனர்.
பிரதமர் மோடியின் நண்பரும் பிஜேபி தலைவருமான அமித் ஷா ’வாமன ஜெயந்தி’ என்று வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, மலையாளிகள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பிற முற்போக்கு இயக்கங்களும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.