ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்... பிடிவாதத்தை விட்ட ஜெகன்!

திங்கள், 22 நவம்பர் 2021 (17:33 IST)
3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவை கைவிடுவதாக ஜெகன் மோகன் அரசு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 

 
ஆந்திராவில் மூன்று தலை நகரங்கள் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி காலத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவை கைவிடுவதாக ஜெகன் மோகன் அரசு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 
 
முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதியை தலைநகராக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காக பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றிருந்தது. எனவே மக்கள் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 
 
இதனிடையே இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளதாவது, ஆந்திராவின் அனைத்து பிராந்தியங்களின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம் என்பதை நாங்கள் நம்பினோம். அது தொடர்பாக முன்பு எங்கள் அரசு கொண்டு வந்த மசோதாவை திரும்பப் பெறுகிறோம். விரைவில் பிழை இல்லாத மசோதாவை பேரவையில் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார் . 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்