ஆற்றில் மூழ்கிய யானை; கயிறு கட்டி காப்பாற்றிய மக்கள் – நெகிழவைக்கும் வீடியோ!

செவ்வாய், 29 அக்டோபர் 2019 (17:41 IST)
ஆற்றில் மூழ்கிய யானை ஒன்றை பொதுமக்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் வெளியிடும் விலங்குகள் நேய வீடியோக்கள் மற்றும் செய்திகள் மக்களிடையே விலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் காயம்பட்ட யானை ஒன்று ஆற்றில் மூழ்கி சாகும் தருவாயில் உள்ளது.

அந்த ஆற்றின் கரையோரமாக இருந்த மக்கள் அந்த யானையை மீட்க கயிற்றை அதன் மேல் கட்டி ஊரே சேர்ந்து இழுக்கிறார்கள். கரைக்கு கொண்டு வரப்பட்ட யானையின் காயத்திற்கு மருந்திட்டு, சேற்றை கழுவி, உணவளித்து கவனித்து கொள்கின்றனர்.

எழ முடியாத யானையை அனைவரும் சேர்ந்து கட்டி எழுந்து நிற்க வைக்கிறார்கள். ஒரு யானையை காப்பாற்ற ஒரு கிராமமே எடுத்த அந்த முயற்சியை சுட்டிக்காட்டியுள்ள கஸ்வான் ‘இது பழைய வீடியோதான். ஆனாலும் விலங்குகள் மீது மக்கள் கொண்டுள்ள அன்பை அனைவரும் அறிய இதை ஷேர் செய்திருப்பதாக கூறியுள்ளார்.

This will raise your respect for people. An #elephant was found in very critical condition in a river. This is how so many people came together & saved him. Also because the grit shown by the gentle giant. Old video. pic.twitter.com/EOgu9ezxtQ

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 28, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்