கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : அமித்ஷா உறுதி

புதன், 7 மார்ச் 2018 (12:25 IST)
பாஜகவினர் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சிரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் நேற்று முன்தினம் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. இது குறித்து எச்.ராஜா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை சாதி வெறியர்  ஈவேரா சிலை அகற்றப்படும்  என தெரிவித்திருந்தார். இதனால் பெரியார் சிலை ஒருசில இடங்களில் மர்ம நபர்கள் சேதபடுத்தியுள்ளதால் தமிழகம் முழுவதும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சிலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், அதில் ”தமிழகம் மற்றும் திரிபுராவிலுள்ள பாஜக கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளேன். சிலைகள் சேதப்படுத்தும் சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டால். அவர்கள் மீது கட்சிரீதியான நடவடிக்கை எடுக்கபடும்” என தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய முத்துராமன் என்பவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்