சோமாட்டோ ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனம் ’பெற்றோர் கடமை விடுமுறை’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக உள்ள சோமேட்டோ உலகம் முழுவதும் 13 நாடுகளில் தங்களது சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம் ’பெற்றோர் கடமை விடுமுறை’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, குழந்தை பிறக்கும் ஆண், பெண் இருவருக்கும் ரூ.70,000 மற்றும் 6 மாத லீவ் வழங்கப்படுமாம், இதுவே பெற்றோர் கடமை விடுமுறை (New parental leave policy) எனப்படுகிறது.
இது குறித்து சோமேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பின்வருமாறு, சொந்த வாழ்க்கையின் இலக்கும், அலுவலக வாழ்க்கையின் இலக்கும் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதோ அப்போதுதான் ஊழியர்கள் சிறந்த வேலையை அளிப்பார்கள்.
மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிப்பதில் பெண்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ, அதே சலுகையை ஆண் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளோம்.
இந்த சலுகை, குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமேட்டோ இந்த அறிவிப்பு அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு சிறந்த திட்டமாக இருப்பதால் பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறது.