உலக தரத்தில் விமான சேவையை தருவோம்: டாடா நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:44 IST)
ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடாவிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உலகத்தரமான விமான சேவையை தருவோம் என டாடா நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியது என்பதும் அந்த நிறுவனம் முழுமையாக சற்று முன்னர் டாடா நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை பெற்ற பின்னர் டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்தில் சேர்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க அனைவருடனும் சேர்ந்து செயல்பட நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்